காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது. அதன்படி செயல் திட்ட அறிக்கை நகல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், காவிரி வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேர...









