சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர்.
அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறைக்கு சந்தேகப்படும்படியாக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்ததும், மற்றொரு வாலிபர் கழிவறைக்குள் சென்றுவிட்டு வந்தார்.
இதைக் கண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர், விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் நிழல் ரவி (வயது 29) என தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது, 2 பொட்டலங்களில் 27 தங்கக் கட்டிகள் வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர்.
துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளைக் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நியாமத்துல்லா ...









