செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்!

போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
  போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்! சமுத்ரகனி படம் என்றாலே ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என யோசிக்கும் அளவுக்கு சமீபத்திய படங்கள் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்போது அதற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக காவல்துறையில் உள்ள ரைட்டர் பதவியில் இருக்கும் சிரமங்களை மிக சீரியசாக சொல்ல வருகிறது ரைட்டர். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரிக்கும் இந்த படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலியுடன் மிக யதார்த்தமான கதையை சொல்வது போன்று வெளியாகி வருகிறது. இந்த டிசைன்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற விட்டிருக்கிறது. கபிலன், சந்தோஷ் நாராயணன் இருவரும் இந்த டிசைன்களின் மீது காட்டும் ஈடுபாட்டால் தமிழ் சினிமாவில் ரைட்டர் மீதான எதிர்பார்ப்பும் ஏகத்துக்கு எகிறி உள்ளது. நடிகர்கள், ந...
சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு

சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு

HOME SLIDER, MOVIES
  *சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு* சயின்ஸ் பிக்சன் கதையில், டைம் லூப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஒளிபரப்ப ஆயத்தமாகி வருகிறது கடந்த நவ-25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த மாநாடு படம் வெளியானது ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் காமெடி என சரிவிகித கலவையாக, டைம் லூப்பில் நகரும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருந்த இந்த மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறது.. நாயகன் அப்துல் காலிக் தொடர்ச்சியாக டைம் லூப்பில் மாட்டிகொண்ட பின்னர் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நிகழ்வுகளில் கொண்டுபோய் அவரை சிக்கவைகிறது.. நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய முற்படும்போதும் நம்முடைய சுயநலத்துக்காக அழிவுகரமான செயல்களில் ஈடுபடும்போதும் இந்த உ...
மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி!

HOME SLIDER, செய்திகள்
  மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி. கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் - பா.இரஞ்சித். ‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ”மார்கழியில் மக்களிசை பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு இன்று மதுரையிலும்...
“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்

“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
கார்த்திக் மற்றும் சப்னா சின்ன வயது முதல் காதலர்கள். சொந்த வீடு கட்டினால் தான் திருமணம் என்பது சப்னாவின் கனவு. அவர் வேலை செய்யும் ஐடி கம்பெனியிலிருந்து கால் டாக்சியில் தினமும் வீட்டிற்கு வருகிறார். அதே சூழலில் சில இடங்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. வழக்கம்போல சப்னா வேலை முடிந்து வரும்போது காரில் கால்டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சப்னாவை தேடி அலைகின்றனர். இறுதியில் சப்னாவை கண்டுபிடித்தார்களா? கால் டாக்சி டிரைவர் என்ன ஆனார்? போலீஸ் கடைசியில் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை. இயக்குனர் கார்த்திக் தாஸ் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்து கதை எழுதி இருந்தாலும் அதை இன்னமும் மெருகேற்றி திரைக்கதையில் மேக்கிங்கில் கவனம் செலுத்தி இ...
”எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தது நீங்கள்தான்” அமேதியில் ராகுல் காந்தி

”எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தது நீங்கள்தான்” அமேதியில் ராகுல் காந்தி

HOME SLIDER, politics
  உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே களப்பணியாற்ற தொடங்கிவிட்டன. பிரதமர் மோடி தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். பாஜகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் அதிரடி காட்டி வருகிறது. அவ்வகையில், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக அமேதியில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த பேரணியில் ராகுல் காந்தி எம்பி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பேரணியில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘அமேதியில் உள்ள ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது. ஆனால், மக்கள் பார்வையில் அரசாங்கத்தின் மீதான கோபம் மட்டுமே உள்ளது’ என்றார்....
முன் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய ராஜேந்திர பாலாஜி

முன் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய ராஜேந்திர பாலாஜி

HOME SLIDER, politics, செய்திகள்
முன் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.  ஆனால், அவர்களின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், முன்ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...
மனதை உலுக்கும் பாடல் மூலம் மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம்!

மனதை உலுக்கும் பாடல் மூலம் மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
  மனதை உலுக்கும் பாடல்! மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம். “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி.. “ “ஐஸ்வர்யா முருகன்” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு ! 'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில், மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'. காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் - மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதல...
சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் " ஒபாமா " இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஒளிப்பதிவு - தினேஷ் ஸ்ரீனிவாஸ் இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து எடிட்டிங் - B.லெனின் நடனம் - சேகர் ஸ்டண்ட் - தபதி தினேஷ் மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, மணவை புவன் தயாரிப்பு - ஜெயசீலன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நானி பாலா. படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது.. ...
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா! 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி போர்டோரிகோ நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார். உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று அறிவித்தனர். போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதில் இந்திய அழகி மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உலுக அழகி போட்டி அமைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்பாளர்களில் சிலருக்கு கொரோன...
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்! நவிமும்பையில் உள்ள என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பை சேர்ந்த பெண் அன்சு சிங். இவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார். இதனால் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் அப்பெண்ணை நாய்களுக்கு உணவு வழங்க தடை விதித்தது. ஆனால் அன்சு சிங் இந்த தடையை மீறி உணவளித்து வந்தார். இதனால் கட்டிட வளாகத்தில் உணவளித்த குற்றத்துக்காக ஹவுசிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் நாள்தோறும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் விதிக்கப்பட்ட அபாரதம் ரூ.8 லட்சம் வரையில் எட்டி இருப்பதாகவும், இது சட்டவிரோதமானது என அன்சு சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதே போல மற்றொரு பெண்ணும் தெருநாய்களுக்கு உணவளித்ததாக ரூ.6 லட்சம் வரையில் அபராதம் விதித்தது. இது பற்றி ஹவுசிங் காம்ப்ளக்ஸ் செயலாளர் வினிதா ஸ்ரீ...