செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முதன்முறையாக வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா! தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது அருணாச்சலம் வைத்யநாதன் என பெயரை மாற்றியுள்ள இவர், குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஷாட் பூட் 3’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் நடிகை சினேகாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இதற்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் நடிகை சினேகா நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்....
பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்த கொள்ளையர்கள்!

பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்த கொள்ளையர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிரபல நடிகையிடம் துப்பாக்கி முனையில் பணம் பறித்த கொள்ளையர்கள்! பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவலிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நிகிதா ராவல், டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்துள்ளனர். இதையடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நடிகை நிகிதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர். பணத்தை இழந்த நடிகை நிகிதா ராவல், பயந்து வீட்டுக்குள் ஓடிச்சென்று பீரோவில் ஒளிந்துகொண்டாராம். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகை நிகிதா ராவல் கூறும்போது, “இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. நான் உயிரோடு இருப்பதையும்...
ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்! `குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘ஷேர்ஷா’ என்கிற பாலிவுட் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது விஷ்ணுவர்தனும் அந்த ...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை! கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது....
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 11-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது....
ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை!

ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன்கள் சுபாஷ், பரத். சத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுபாஷ் 8-ம் வகுப்பும், பரத் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் கொடைக்கானலை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அஜய் பிரசன்னா ஒரு நிமிடத்தில் 82 தடவை தோப்புக்கரணம் போட்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஒரு நிமிடத்தில் 88 தோப்புக்கரணம் போட்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார். இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த ஹேமந்த் என்ற மாணவன் ஒரு நிமிடத்தில் நாற்காலியின் மேல் நின்று 41 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை படைத்துள்ளார். இந்த செய்தியை பார்த்த சுபாசும், பரத்தும் உலக சாதனை படைக்க நாமும் முயற்சிக்க வேண்டும் என முடிவெட...
தற்கொலைக்கு தூண்டுதல் என்றால் என்ன?- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் விளக்கம்!

தற்கொலைக்கு தூண்டுதல் என்றால் என்ன?- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் விளக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தற்கொலைக்கு தூண்டுதல் என்றால் என்ன?- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் விளக்கம்! தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவர் 27 ஆண்டுகளுக்கு முன் திருமலைக்கனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு மே 7-ந்தேதி பூச்சிமருந்தை குடித்தனர். அதில் திருமலைக்கனி இறந்துவிட, 4 நாள் சிகிச்சைக்குப்பிறகு வெள்ளைத்துரை உயிர் பிழைத்தார். அதையடுத்து திருமலைக்கனியின் சகோதரர், தனது அக்காவை தற்கொலை செய்ய தூண்டியதாக அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன், ரூ.2,500 அபராதமும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை, ரூ.2,500 அபராதமும் விதித்து திருநெல்வேலி செசன்ஸ் கோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்...
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது வென்ற இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மணிகண்டனுடன் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டனுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய விஜய் சேதுபதி, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது!

படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது! கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இந்த படகுகளை கேரள மக்கள் புனிதமாக கருதுகின்றனர். இவற்றை பூஜை செய்த பிறகே விழாக்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான, பாம்பு போன்ற நீண்ட வடிவில் இருக்கும் படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது காலில் அவர் செருப்பும் அணிந்து இருந்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிமிஷாவை பலரும் கண்டித்தனர். கேரள தேவஸ்தானம் சார்பில், நிமிஷா மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிமிஷாவை போலீசார் கைது செய்தனர். நிமிஷா கூறும்போது, “இந்த படகு புனிதமானது என்று எனக்கு தெரிய...
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு! பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு வருகிற 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த 2 மேல்சபை எம்.பி. இடங்களையும் தி.மு.க. எளிதாக பெறும் என்பது ஏற்கனவே உறுதியானது. இந்த நிலையில் அந்த 2 இடங்களுக்கும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...