புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை! தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “கரூர் தொகுதி ஓட்டுக்களை எண்ணும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து இருந்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை” என்று கூறி இருந்தார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்தது. கூடுதலாக 6 மேஜைகள் போடப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ...
தேர்தல் வெற்றியை கொண்டாட தடை

தேர்தல் வெற்றியை கொண்டாட தடை

HOME SLIDER, NEWS, politics
தேர்தல் வெற்றியை கொண்டாட தடை இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2771 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநி...
கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா தொற்று அறிகுறி... தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா! நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும்,...
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்!

தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்....
இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி! உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆஸ்கர் விருது, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. அந்தவகையில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது. இந்த விருது வழங்கும் விழாவில், கடந்தாண்டு உயிரிழந்த முக்கியமான நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்த இந்திய நடிகர...
விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்!

விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய்! தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக் மரணமடைந்தபோது நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிருந்ததால், விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. இதனிடையே ‘தளபதி 65’ படப்பிடிப்பு முடிந்து நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய். இன்று காலை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய், அங்கு விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நடிகர் விஜய்யும், விவேக்கும் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Related Tags :...
படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் – வைரலாகும் வீடியோ!

படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் – வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் - வைரலாகும் வீடியோ! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர்கள் பிரசாந்த், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்கும...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து! கொரோனா தொற்று 2-ம் அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் பலருக்கு கடுமையான சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கவலைப்படும் வகையில் அதிகரித்து வருகிறது. மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைப்பது தாமதம் ஆகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பக்கத்து மாநிலங்கள...