புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது - விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்! வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக, தொலைதூரம் செல்லும் பஸ்கள் தற்போது பகல் நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும்...
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழக அரசு! தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, *தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம். *ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம். *கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. *சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.  *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. *அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. *உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி. *உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. ...
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!

விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் சேதுபதி பாடல் படைத்த சாதனை! விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது....
சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்!

சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்ச்சை காட்சிகள்... ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்! ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில் குறிப்பிட்டு இருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர். படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர். பின்னர் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்...
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு!

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: * கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். * மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. * கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே!

16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே!

HOME SLIDER, NEWS, செய்திகள்
16 சிறப்பு ரெயில்கள் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே! முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவை நாளை குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 பயணிகள் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரெயில் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர்-புதுச்சேரி, திருச்சி-கரூர், திருச்சி- காரைக்கால், விழுப்புரம்-மதுரை ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் ரெயில்கள் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யக்கூடிய சிறப்பு ரெயில்களாக இதுவரையில் இயக்கப்பட்டு வந்தது. கொல்லம்-ஆழப்புழா, ஆழப்புழா-கொ...
அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு!

அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அதை யாரும் நம்பாதீங்க... சிபிராஜ் அறிவிப்பு! சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பிரபலமான நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மர்ம கும்பல் தற்போது நடிகர் சிபிராஜின் பெயரைப் பயன்படுத்தி பெண்களைக் குறிவைத்துள்ளது. சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த கும்பல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் சிபிராஜின் கவனத்திற்கு வர, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இது...
நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்!

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்! சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார். அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இ...
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட்! ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன. விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Man of Fusion என்ற தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்....