புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்!

‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்! ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி, சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சூரி, ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை, அது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “தலைவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு, வேற லெவல் எனர்ஜி. அவருடன் நடிப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’…. நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி! ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன். சமீபத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த விஜ...
பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்!

பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாடல்களே இல்லாமல் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜன்! தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், விக்ரம் பிரபு ஜோடியாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சசிகுமாருக்கு ஜோடியாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, விக்ரமின் ‘சியான் 60’, சூர்யா தயாரிக்கும் 2 படங்கள், ராதாமோகன் இயக்கும் படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் வாணி போஜன். இந்நிலையில், அவர் அடுத்ததாக பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாடல்களே...
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் - ஏ.ஆர்.ரகுமான்! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ''இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன். சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்...
எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்!

எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 10 சதவீத படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார். மேலும் எனிமி படத்தின் டீசரை இரண்டு வாரத்திற்குள் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
280 கோடி ரூபாய் ஊழல் பதவிக்காலம் முடிந்து சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம் – நீதிபதி கலையரசன் எச்சரிக்கை

280 கோடி ரூபாய் ஊழல் பதவிக்காலம் முடிந்து சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம் – நீதிபதி கலையரசன் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics
  280 கோடி ரூபாய் ஊழல் பதவிக்காலம் முடிந்து சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம் - நீதிபதி கலையரசன் எச்சரிக்கை சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்து எங்கு சென்றாலும் 280கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும், பதில் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்து பேசியுள்ள நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணை 80% நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுகிறது. இன்னும் 3 முதல் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அனைத்து குற்றச் சாட்டுகளையும் தொகுத்து, சூரப்பாவிடம் பதில் கேட்கப்படும். எழுத்துப்பூர்வமாகவோ, நேரிலோ பதிலளிக்கலாம். எழுத்துபூர்வமான விளக்கத்தின் மீது ஆணையத்திற்கு திருப்த...
படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!

HOME SLIDER, NEWS, politics
  அரக்கோணத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகளையொட்டிய விவாதங்களில் ஒன்றாக, திருமாவளவன் மீது படித்த இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார் பாமக இளைரணித்தலைவர் அன்புமணி. அதற்கு எதிர்வினையாக, என் படிப்பு இது, நான் திருமாவளவனோடு நிற்கிறேன் என்று ஏராளமான பட்டதாரிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்கள். இந்நிலையில்,நேற்று (ஏப்ரல் 11) நடந்த நேரலை நிகழ்வொன்றில் திருமாவளவன் ஆற்றிய உரை….. திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக...
10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

HOME SLIDER, sports
  10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!   ஐபிஎல் 2021 சீசனின் மூன்றாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது. திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 5 ரன்னிலும், மோர்கன் 2 ரன்னிலும் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இறுதியில், கொல்கத்தா நைட் ர...
சதுப்பு நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

சதுப்பு நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சதுப்பு நிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி சென்ற தனியார் ஹெலிகாப்டர், கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூலூ குழுமத்தின் தலைவரான யூசுப் அலி, பயணித்த ஹெலிகாப்டர் கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இவருடன் 6 பேர் பயணித்தனர். அப்பகுதியில் கடும் காற்றுடன் மழையும் பெய்ததால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விமானி சமாளித்து விமானத்தைச் செலுத்தியதால், சதுப்பு நிலப் பரப்பில் விமானம் தரையிறக்கப்பட்டது.  யூசுப் அலி மற்றும் அவருடன் பயணித்த 6 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர். மேலும் அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் தனியார் மருத்...
கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா

கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா

HOME SLIDER, NEWS, politics
மேற்கு வங்காள மாநிலத்தில் நான்காம் கட்ட தேர்தலின்போது, கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பாஜகவின் சதி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கூஜ்பெகர் மாவட்டத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்களி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சிலிகுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூஜ்பெகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்றும், மார்பு மற்றும் கழுத்தை குறிவைத்து சுடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். சிஐஎஸ்எப் வீரர்கள், தொழிலக விவகாரங்களை கையாள மட்டுமே பயிற்சி பெற்...