செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

HOME SLIDER, NEWS, politics
‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்! ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து 2 பேரிடமும் விசாரித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த வேளச்சேரி போலீசார், ‘விவிபேட்’ எந்திர...
திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா! சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் ...
முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முதல் ஆளாக வாக்களித்தேன்... விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை - சமுத்திரகனி! தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. திரையுலகினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேசமயம் பல முக்கிய திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை என தகவல் பரவியது. அதில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அவர் ஓட்டு போட்ட விரல் ‘மை’ அடையாளத்துடன் புகைப்படம் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியதாவது: “நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம். ஆனால் ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பி...
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏப்.11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு. தமிழக முதல்வராக 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமான ரூ 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக திமுக தொடர்ந்த வழக்கு  பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தனிநீபதியாக நீதிபதி குன்ஹா நியமிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா வழக்கை  2003ம் ஆண்டு முதல்  விசாரித்து  வந்தார்.  18 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு,  2014-ஆம் ஆண்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.  சொத்துக்குவிப்பு வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும்  4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பதவியில் உள்ள ஒரு முதல்வர் சிறைக்கு சென்றது இதுவே முதல் முறை ...
வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரியில் சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். வாக்காளர்களுக்கு என் அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்....
“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி

“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி

HOME SLIDER, NEWS, politics
“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நிகழும்போதெல்லாம், வாக்குகள் தாமரை சின்னத்திற்கே விழுவது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி. வாக்குப்பதிவு இயந்திரங்களில், கோளாறு நிகழும் சமயங்களில், வாக்குகள் தவறியும்கூட, எதிர்க்கட்சிகளின் சின்னங்களுக்கு விழுவதில்லையே? அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிகழ்கிறது. அதற்கு என்ன காரணம்? என்றுள்ளார் அவர். ‍நேற்று, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சில தொகுதிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், வேறு சின்னங்களுக்கு போடப்பட்ட வாக்குகள், தாமரை மற்றும் இரட்டை இலைக்கு விழுந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற புகார்கள் வேறு மாநிலங்கள...
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மேரிகோம்..!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மேரிகோம்..!

HOME SLIDER, sports
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதிப‍ெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வரும் மே 21 முதல் 31 வரை நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்கிறார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரைப் பொறுத்தவரை, மேரிகோம் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். அவற்றுள் 5 தங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு, இத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேரிகோம் 51கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளார். சமீபத்தில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில், இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற பிறகு, இவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். மேரிகோம் உடன், ஆசிய தொடரில் பங்கேற்கவுள்ள மற்றொரு முக்கிய வீராங்கனை லவ்லினா போரோஹெய்ன். 69 கிலோ எடைப்பிரிவில் இடம்பெற்றுள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் ...
பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி – ‘சுல்தான்’  கார்த்தி

பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி – ‘சுல்தான்’ கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி – 'சுல்தான்’ கார்த்தி சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என...