செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்! திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்....
கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்!

கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்! தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா,  கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி. மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இர...
விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாநகரம். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் நாயகனான விக்ராந்த் மஸ்ஸேவின் பிறந்தநாளான இன்று, மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி உள்பட சில நடிகர்களின் தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுவரை வெளியான இப்படத்தின் பாடல்களும், டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு மட்டுமின்றி, சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக பண்டாரத்தி என்ற பாடலால் உருவான சர்ச்சையால், அதனை மஞ்சனத்தி என மாற்றிவிட்டனர். படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கு மேல் சர்ச்சைகளில் சிக்கிவிட வேண்டாம் என்பதற்காக, கர்ணன் படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அதன்படி, படத்தின் டிரெய்...
குறும்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்!

குறும்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குறும்பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி உள்ளார். விஷாலை வைத்து இவர் இயக்கும் படம் ‘அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன்’ என்ற கதை கருவில் தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இப்படத்திற...
மண் தரையில் தூங்கிய சிம்பு!

மண் தரையில் தூங்கிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மண் தரையில் தூங்கிய சிம்பு! நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்...
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா! நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ...
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்!

ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்! இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், 67-வது தேசிய விருது வழங்கும் விழா, வருகிற மே மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெற உள்ளனர். இது அவர்களது குடும்பத்தினர் மற்றுமின்றி, ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது....
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை! தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரப...
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடல்: தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு தடை! கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் ரவிக்குமார் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- 1. கர்நாடகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்பு மற்றும் வித்யாகம வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் 10 முதல் பி.யூ.கல்லூாி வரை நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதில் மாணவர்களின் வருகை கட்டாயமல்ல. 2. கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் வகுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகம், மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்...