செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்....
லால் எனக்கு கட்டப்பா- கார்த்தி!

லால் எனக்கு கட்டப்பா- கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லால் எனக்கு கட்டப்பா - கார்த்தி! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. பல படங்களில் வில்லனாக மிரட்டிய லால் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லால் பற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, ‘லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார். என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரம். அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன். உணர்வு, சண்டை, நடனம் எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்கிறார்’ என்றார்....
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி! ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான பக்...
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி! கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை பெ...
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது ! தேர்தல் நடக்கும் சமயங்களில் வாக்காளர்கள் மிக எளிதாக வாக்கு அளிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்குவது வழக்கத்தில் உள்ளது. முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர் சின்னத்துடன் வாக்காளர் சீட்டு அச்சடித்து வீடுவீடாக வினியோகம் செய்வார்கள். அரசியல் கட்சிகள் வாக்காளர் சீட்டுகளை வினியோகிப்பதால், குழப்பம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு சீட்டு வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையமே மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் வாக்களிப்பதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி...
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ், அப்படம் முதல் ‘அட்டகத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தினேஷ் நடிப்பில் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். “வயிறுடா” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்....
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ்க்கு கொரோனா! மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வலிமையுடன் திரும்பி வருவேன் என்று அவர் கூறியுள்ளார்....
தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்!

தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தளபதி 65 அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்! மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். விஜய்யின் 65-வது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சிக்காக இணைந்திருக்கிறார். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என்ற பதிவுடன், இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி என்றும், மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்....
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் வீடியோ!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் - வைரலாகும் வீடியோ! அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன். அடுத்ததாக தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசி...
வடிவேலு ரீ-என்ட்ரி!

வடிவேலு ரீ-என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் இப்படத்திற்கு அதையே தலைப்பாக வைக்க உள்ளார்களாம். சுராஜ் - வடிவேலு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அ...