செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில்   ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 23.09.2021: கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேச...
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு! இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள் ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத...
சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்!

சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER
  சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்! தமிழில் நடிக்க ஆசை! சென்னை இளைஞன் எபின் ஆன்டனி ஆங்கில படத்தில் கதாநாயகனாக அறிமுகாகியுள்ளார் .  சமீபத்தில் அமெரிக்காவில் ஆமேசன் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியான டேனில் ரான்சம் கதை எழுதி இயக்கிய " ஸ்போக்கன் "(Spoken) என்ற ஹாரர் படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  இதில் கதா நாயகியயை துரத்தி காதலிக்கும் இசை கலைஞனாக நடித்துள்ளார். சென்னையில் வளர்ந்த இவருக்கு சினிமா நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் கல்லூரியில் படிக்கும் போதே  நூறுக்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில படங்களுக்கும் கார்ட்டூன் படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் . அதுவே இவருக்கு சினிமாவில் பிரவேசிக்க முதல் படியாக அமைத்தது. அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்றவர், தன் நடிப்பு திறனை அதிகரிக்க , லாஸ் ஏஞ்சல்சிலுள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் ந...
கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் ‘திரிஷ்யம்’ பட நடிகர்!

கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் ‘திரிஷ்யம்’ பட நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் ‘திரிஷ்யம்’ பட நடிகர்! விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘வெந்து தணிந்தது காடு’.  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்கிறார். ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகர் சித்திக், சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரிஷ்யம், ஹே ஜூடு, ஒடியன் போன்ற ம...
19 வருட கனவு நனவானது – நடிகர் ஜெய் நெகிழ்ச்சி!

19 வருட கனவு நனவானது – நடிகர் ஜெய் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
19 வருட கனவு நனவானது - நடிகர் ஜெய் நெகிழ்ச்சி! விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ சிவா’ படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியதாவது: “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிவ சிவா படத்துக்காக அவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்கிற ...
‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு.... ரிலீஸ் தேதி அறிவிப்பு! யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார். கூர்கா பட பிரபலம் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரீத்தம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ராய் லட்சுமி நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ ஆகிய ப...
ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு!

ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு! கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.12 கோடி ஆகும். கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்தார். அதில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு ரூ.12 கோடி விழுந்தது. அதேநேரம் அந்த முதல் பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், தற்போது அந்த அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலனுக்கு இந்த பரிசு கிடைத்து உள்ளது. இவர் கடந்த 10-ந் தேதி இந்த லாட்டரி சீட்டை திருப்பணித்துராவில் உள்ள ஒரு கடையில் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு ரூ.12 கோடியில் 10 சதவீதம் ஏஜென்ட் க...
கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!

கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை! கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முக்கிய குற்றவாளியான சயான், சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் மறுவிசாரணை நடத்தி அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த 3 மாதங்களில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ்குமார், தூக்கில் பிணமாக தொங்கினார். கொடநாடு எஸ்டேட்டின் வரவு- செலவு கணக்குகளை கண்காணித்து வந்த அவர் திடீரென இறந்ததில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் அப்போது புகார் தெரி...
மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு – ரசிகர்கள் உற்சாகம்!

மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு – ரசிகர்கள் உற்சாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸான அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு - ரசிகர்கள் உற்சாகம்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மகான்’ படத்தில் இடம்பெறும் ‘சூறையாட்டம்’ என்கிற பாடல் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். மகான் படக்குழு வெளியிட்டுள்ள இந்த திடீர் அப்டேட்டால் ரசி...