செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல்!

கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது....
ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் !

ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் !

HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் ! ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது... சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு. நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச்சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும், இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் பெரும்பயணம். ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகள...
Prakash Raj joins the sets of Aadhi’s “CLAP”

Prakash Raj joins the sets of Aadhi’s “CLAP”

CINI NEWS, HOME SLIDER, MOVIES
  Prakash Raj joins the sets of Aadhi’s “CLAP” The entire team of Aadhi starrer “Clap” is sparkling with lots of energy and elations. The reason – Ace actor Prakash Raj has joined the sets to shoot his portions. Prithivi Adithya, director of this film, says, “To work with an awe-inspiring actor like Prakash Raj sir is a dream for every filmmaker. He has proved his credibility as a dedicated artiste by the beginning of his acting career itself and the experience he carries across the years from various industries and his diversified roles as an actor, director and producer is beyond brilliance. Moreover, a film featuring Prakash Raj sir becomes an instant Pan-Indian attraction for his unparalleled style of performance is lauded by everyone. It’s been a delight to welcome h...
ராமதாஸ் பெயரில் மாறிய கல்வி அறக்கட்டளை மர்மம்! வெள்ளை அறிக்கை வருமா?

ராமதாஸ் பெயரில் மாறிய கல்வி அறக்கட்டளை மர்மம்! வெள்ளை அறிக்கை வருமா?

HOME SLIDER, politics, வீடியோ
  ராமதாஸ் பெயரில் மாறிய கல்வி அறக்கட்டளை மர்மம்! வெள்ளை அறிக்கை வருமா?   https://youtu.be/V7TTHRDxRkI
நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

நாட்டின் மிகப்பெரிய சாபம் பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை – குற்றஞ்சாட்டும் மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 ஏப்ரல் – மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பங்குரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை பொய்களின் குப்பை மற்றும் நாட்டின் மிகப்பெரிய சாபம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், திரிணமூல் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயன்று அவர்களை வேட்டையாட முயற்சித்து வருகிறது. காவிக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று சிலர் மாயையில் இருக்கிறார்கள். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை. தேர்தல் வரும்போதெல்லாம், அவர்கள் திரிணமூல் கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நாரடா மற்றும் சாரதா  பிரச்னைகளை கொண்டு வருகிறார்கள்.ஆனால் நான் அவர்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன், நான் பாஜகவோ அல்லது அதன் ஏஜென்சிகளைப் பற்றி பயப்படமாட்டேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னைக் க...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது – அமைச்சர் ஆர் பி உதயகுமார்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது – அமைச்சர் ஆர் பி உதயகுமார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை இன்று எட்டியது. இதனால் இன்று மதியம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் திருநீர்மலை, அனகாபுத்தூர், திருமுடிவாக்கம், கவுல் பஜார் பகுதிகளில் ...
தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி!

தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி இந்தியாவில், கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 1 முதல் பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலம் என்பதால் கரோனா தொடர்ந்து பரவிவரும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைத்தலில் தீவிரம் காட்டுதல், கரோனா தடுப்பு பழக்கவழக்கங்களை மக்கள் கடைபிடிக்கச் செய்வதில் உறுதியாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்றலாம். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் மக்கள் மெத்தனம் காட்டாமல் இருக்க மாநிலங்கள் கூடுதல் அபராதங்களை விதித்துக் கொள்ளலாம். கரோனா நோயாளிகளைக் கண்டறிதல்,...
வலதுபக்கம் ‘சிபிஐ விசாரணை’ பழனிசாமி இடது பக்கம் ‘சிபிசிஐடி விசாரணை’ பன்னீர்செல்வம் இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? -ஸ்டாலின்

வலதுபக்கம் ‘சிபிஐ விசாரணை’ பழனிசாமி இடது பக்கம் ‘சிபிசிஐடி விசாரணை’ பன்னீர்செல்வம் இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? -ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. -ஸ்டாலின்   திருநெல்வேலி - தென்காசி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது   “கடந்த 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதுபோல அவரது பேச்சூ இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனைப் பட்டியல் போடத் தயாரா என்று அமித் ஷா கேட்கிறார். அ...
அனிமேஷன் படமாக உருவாகும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

அனிமேஷன் படமாக உருவாகும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ‘தி லயன் கிங்’ போன்று முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது....
நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்!

நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன்பின் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுவைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இன்று மாலை நிலவரப்படி 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் புயலின் நகர்வு வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது. இதனால் கரையை நடக்க காலதாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப்படை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்....