மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு 3 புதிய சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு போன்றவற்றை ஒழித்துவிடும் எனவும், விவசாய துறையை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிடும் எனவும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமித்து அவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 34-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் டெல்லிவாசிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர...









