கார்த்தியின் புதிய பரிணாமத்தில் தேவ்..!
காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரம் ‘தேவ் ராமலிங்கம்’
‘தேவ்’ படத்தின் இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கூறியது
கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி.
கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிற...









