சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் கே. வி.பாலா அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.
மேலும் அவர்கள் அளித்த அறிக்கையில் கூறியதாவது :
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கட்கு,
கடந்த சட்ட மன்ற தேர்தலிலே, ஆகப்பெரும் வெற்றியை அடைந்து, நம் தாய்த் தமிழகத்தின் முதல்வராக தாங்கள் அரியணை ஏறியமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்தி வணங்குகிறோம்.
தங்கள் சீர்மிகு தலைமையிலே தமிழகம் தொழில் துறையிலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிலும் தன்னிகரிலா வளர்ச்சி கண்டு, தரணியிலே தலைநிமிரும் என்பதி...









