வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

வைரலாகி வருகிற சாக்ஷி அகர்வால் நடித்த தி நைட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வைரலாகி வருகிற சாக்ஷி அகர்வால் நடித்த தி நைட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    சாக்ஷி அகர்வால் நடித்த தி நைட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் ஏற்கனவே ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் டெடி, அரண்மனை 3 ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் ஒப்பந்தமான திரைப்படம் தி நைட். இந்த திரைப்படத்தை ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கி உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி உள்ளது இதில் கவர்ச்சி போஸ் கொடுத்து கையில் கோடாரியுடன் இருக்கும் சாக்சி அகர்வாலின் போஸ் வைரலாகி வருகிறது. விது எனப்வர் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாகவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் இந்த திரைப்ப...
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தியேட்டர்களில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,  தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் நாளை முதல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுபற்றி மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: திரையரங்குகளில் நாளை முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம். தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீ...
தனுஷின் கர்ணன் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீஸ்!

தனுஷின் கர்ணன் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தனுஷின் கர்ணன் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீஸ்! தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!

சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் இயக்குனர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் விலகியதால் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’, சீதக்காதி போன்ற படங்களில் வயதானவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்த...
எந்திரன் பட கதை திருட்டு  இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட்!

எந்திரன் பட கதை திருட்டு இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள்
  எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் 11 ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. கடந்த 10 வருடங்களாக சென்னை உ...
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, திரைப்படங்கள், நடிகைகள்
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில், தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது 'நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' ...
மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் 

மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றும் ஏற்பட்டது. எனவே, விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது. சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீரான நிலையில் இருந்தது. எனவே, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக கொர...
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒன்றிணைவோம் வா,  விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் ஆகிய தலைப்புகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக புதிய கோணத்தில்  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்ற வாக்குறுதியுடன் இந்த பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார திட்டத்தை திருவண்ணாமலை தொகுதியில் தொடங்கினார். காலையில் திருவண்ணாமலை தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். ...
பட்ஜெட் கூட்டத்தொடர்… ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

பட்ஜெட் கூட்டத்தொடர்… ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன....
முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்… பதறிய அதிகாரிகள்!

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்… பதறிய அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics
அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள்... சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.... முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.ஆனால் அருகில் சென்ற க...