என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை
வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் கடமை
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களைப் பற்றி வசைபாடுவதை தான் என்றுமே ஆதரித்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
”நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறித்ததே.
என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்.
சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும்...









