திரெளபதி 2 கதை குறித்து இப்போது சொன்னால் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் இயக்குனர் மோகன் ஜி!
2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார்.
ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் மோகன்.ஜி பேசியதாவது:
திரெளபதி படத்தின் தொடர்ச்சிதான் திரெளபதி 2. முதல்பாகத்தின் நாயகன் ...









