செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

தலைகீழாய் நின்று ’’யோகா’’ செய்யும் நடிகை!

தலைகீழாய் நின்று ’’யோகா’’ செய்யும் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை அமலாபால் தற்போது,அதோ அந்தப் பறவைபோல என்ற படத்தில் நடித்துள்ளார். இது ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. அத்துடன் ,இவர் லஸ்ட் ஸ்டொரீஸ் என்ற வெப்சீரீஸின் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருகும் அமலாபால், யோகா செய்வதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதில். ஒரு துணியின் உதவியுடன் அந்தரத்தில் தலைகீழாகத்தொங்குவது போன்றபல வகையில் யோகாசனங்களைச் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. https://www.instagram.com/p/CI57h6gjHTx/?utm_source=ig_web_copy_link...
பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர் ’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் ஆர். ஸ் மற்றும் சேதுபதி & சிந்துபாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் ’பரோல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்ப்பை பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டி...
“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

“Carvaan Lounge Tamil” – “Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்கும் இசை விருந்து.!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  "Carvaan Lounge Tamil" - "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து வழங்கும் இசை விருந்து.! "Carvaan Lounge Tamil", இது "Saregama" மற்றும் "Amazon Prime Music" இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமானத்துடன் அரங்கேற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளர்/நடிகர்/இயக்குனருமான விஜய் ஆன்டனி "நினைத்தாலே இனிக்கும்" என்கிற திரைப்படத்தில் அமைந்த  "நம்ம ஊரு சிங்காரி" எனும் பாடலின் வீடியோ பதிப்பு  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது. இந்த இசை தொகுப்பில் மேலும் 6 பாடல்கள் வெளியாக உள்ளது,   இசையமைப்பாளர்கள் தரன் குமார், சி. சத்யா, கிரீஷ் கோபாலகிருஷ்ணன், அருள் தேவ், Flute நவீன் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர் . பிரபல வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா பாடகர் கார்த்திக் அவர்கள...
ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார். இதனிடையே தமிழில் ‘நெற்றிக்கண்’ மலையாளத்தில் ‘நிழல்’ ஆகிய நயன்தாரா நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் ‘நிழல்’ படத்தை அடுத்து மலையாளத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பாட்டு’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ...
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கிரிக்கெட் சங்க நிதி மோசடி தொடர்பாக, பரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் ரூ.11.86 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா. அப்போது கிரிக்கெட் வளர்ச்சிக்காக ரூ..43.69 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பரூக் மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அமல...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய ‘அசுரன்’, ‘தேன்’ படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகிய 'அசுரன்', 'தேன்' படங்கள்! இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள் இந்நிலையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் வெகுஜன பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் சாதிய மனநிலையை மிகக் கடுமையாக சாடி எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் வெளியான படங்களில் அசுர ...
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் – அன்வர்ராஜா எம்.பி.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் – அன்வர்ராஜா எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் - அன்வர்ராஜா எம்.பி. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியில இன்று பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனக் கூறினார். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும்எனக் கூறினார். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவித்து, பிரச்சாரத்தையும் முதலமைச்சர் துவங்கி விட்டார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறிவரும் பா.ஜ.க, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தி...
ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா

ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்கள் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன   இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் அவர் கடல் மார்க்கமாக நேபாளம் வழியாக தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அவரை பிடிக்க சர்வதேச போலீசார் (இன்டர்போல்) உதவியுடன் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டார். அதில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் அந்நா...
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் தமிழகத்தில் அந்த கட்சிக்கு எந்த சின்னத்தையும் ஒதுக்கவில்லை. அதேசமயம் டார்ச் லைட் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால், தமிழகத்திலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கமல் ஹாசனே நேரில் வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை விட்டுத்தர மாட்டேன் என அக்கட்சியின் தலைவர் விஸ்வாதன் கூறியிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக விஸ்வநாதன், தனது கட்சிக்கு கொடுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுத்துள்ளார். டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் சின்னங்களை ஒதுக்க வேண்டு...
ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே உள்ள சிறிய கிராமத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி, உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் தண்டுவடத்தில் அடிபட்டு படுத்த படுக்கையானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து சென்றும், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசரகதியில் உ.பி. போலீசார் எரித்தனர். இந்த விவகாரம் பெரும்...