பாக்.பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்..!
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந்தேதி நடத்திய கொடூர தாக்குதலாலும், அதைத் தொடர்ந்து 26-ந்தேதி பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்து கொடுத்த பதிலடியாலும் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன. அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன.
ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்றை இந்தியா இழக்க நேரிட்டது.
அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததால், அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. இவர் ச...









