நம்ப மறுத்த விவேக் ஓபராய் – சாதித்து காட்டிய ஆர்கே
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ஆர்கே, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே.
இந்த நிகழ்ச்சி, இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.
பாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது, “ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொ...








