நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் – ராகுல் காந்தி எச்சரிக்கை
நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் - ராகுல்காந்தி
நாம் இருவர் நமக்கு இருவர்’ – 4 நபர்களால் தேசம் நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் அவர் களின் பெயர்கள் தெரியும். ஆக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ யாருடைய அரசு. விரைவில் புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு முறையை அழிக்கும். கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும்.அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வேதனையுடன் எச்சரிக்கை விடுத்தார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசிய போது, “இது விவசாயிகள் போராட்டம் அல்ல; இது தேசத்தின் போராட்டம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும். வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட் டுகள் அழிக்கப்ப...









