செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

ஒசாமா பின்லேடன் மகன் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடன். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் ஹம்சா பின்லேடன். பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹம்சா பின்லேடன். தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வழியே இயக்க உறுப்பினர்களிடம் தகவல்களை அனுப்பி, பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்த வலியுறுத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி அளவிற்கு பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹம்சா பின்லேடன், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் ஈரான் நாட்டில் தஞ்சமடையலாம் எ...
+2 தேர்வு இன்று தொடக்கம்..!

+2 தேர்வு இன்று தொடக்கம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர். பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுத...
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த "இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்" நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய "தூங்கா நகரம்" திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்....
லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி”

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் ''பன்னிக்குட்டி '' எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையாஇயக்குகிறார். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' . இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா , ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ள...
பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!

பிடிபட்ட வீரரை விடுவிப்பதாக அறிவித்த பாக்.அதிபர் இம்ரான்கான்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானபடை பாக் ஆக்ரமிப்பு பகுதியில் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் பல நூறு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நமது போர் விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள். இதில் சென்னை தாமபரத்தை சேர்ந்த அபிநந்தன் பாக் வீரர்களிடம் சிக்கினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் போர் பதற்றம் உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் பாக்.அதிபர் இம்ரான்கான் அதிரடி முடிவை அறிவித்து உலக அரங்கில் தன் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைதியை நிலைநாட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அமைதி பேச்சுவார்த்...
பேராசிரியை நிர்மலாதேவியை  ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

பேராசிரியை நிர்மலாதேவியை ஜாமீனில் வெளியே விட அச்சப்படுகிறதா அரசு? உயர்நீதிமன்ற கிளை கேள்வி?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருக்கும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றிய உதவி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கவர்னர் தாத்தா என்ற வார்த்தையும் இடம்பெற்று இந்த விவகாரம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, 'பெரும் கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட ஜாமீன் வழங்கப்படும் நிலையில் நிர்மல...
விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்

விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், வீடியோ
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி . சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்,பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின்'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்',பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்,நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் 10படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது  விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார்.  அந்த வரிசையில் மார்ச்  15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம்.  இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் . விஜய...
இயக்குனர் ஆன நயன்தாராவின் வில்லன்..!

இயக்குனர் ஆன நயன்தாராவின் வில்லன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் "டோரா" இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ஷான் பரபரப்பாக பேசப்பட்டார்.. இப்போது “ இயக்கி “ என்கிற குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்... கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகடிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்கு காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.. ஆனால் ஷானின் இயக்கி குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான்.. அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் ஷான்.. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை உரசிப் பார்த்திருக்கிற  இயக்கி -யின் இயக்குனர் ஷான் என்ன சொல்கிறார்.. இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன்...500க்கும் மேல் டிரிப் அடித்து ...
சீனு ராமசாமியின் புதுப்படம்..!

சீனு ராமசாமியின் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் சீனு ராமசாமி எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி "தென்மேற்கு பருவகாற்று", "நீர்பறவை", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான "ரெட் ரம்" திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்...
தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87

தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசனின் தாதா87

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் - இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி   பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது. உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. "Ageing Superstar" என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார். இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....