சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

பூஜை போட்ட விஜய் ஆண்டனி…  புல்லட் ஓட்டிய நிவேதா பெத்துராஜ்… திமிரு புடிச்சவன் தீபாவளி..!

பூஜை போட்ட விஜய் ஆண்டனி… புல்லட் ஓட்டிய நிவேதா பெத்துராஜ்… திமிரு புடிச்சவன் தீபாவளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சாருக்கு இது 9வது படம், எனக்கும் இது 9வது படம். அவருடன் இது எனக்கு 4வது படம். திமிரு இருந்தா தான் நம்பிக்கை இருக்கும். நம் மூதாதையர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள், திமிரோடு இருந்தவர்கள். அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து விட்டார்கள். திமிரு என்பது நம் உரிமைகளை தட்டிக் கேட்பது. இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது என்ற...
எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை" இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்... கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்... மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார் கள். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன் ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர்...
யோகிபாபு காதல் சிக்கலுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா – காற்றின்மொழி கலாட்டா

யோகிபாபு காதல் சிக்கலுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா – காற்றின்மொழி கலாட்டா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ​​ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபுவின் சிறப்பு தோற்றம் நாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவிக்கிறது. RJ வாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில...
விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ராந்திற்கு தோள் கொடுக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். இது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இய...
கார்த்தியின் புதிய பரிணாமத்தில் தேவ்..!

கார்த்தியின் புதிய பரிணாமத்தில் தேவ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் கதாபாத்திரம் ‘தேவ் ராமலிங்கம்’ ‘தேவ்’ படத்தின் இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கூறியது கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி. கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிற...
பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்ட சந்தானம்!

பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்   சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry)  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள்  (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.  அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார்  ஒரு முக்கியமான கேர...
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக  இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை  ராதிகா சரத்குமார். இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும்,  நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா  போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம்.  நிச்சயமாக, சிவகார்த்திகேய...
குடும்பத்தோடு பார்க்க தகுதியான U சான்று பெற்ற துப்பாக்கி முனை!

குடும்பத்தோடு பார்க்க தகுதியான U சான்று பெற்ற துப்பாக்கி முனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  க்ளீன் யு சான்று பெற்றது துப்பாக்கி முனை தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 'துப்பாக்கி முனை’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’. சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய ...
18 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

18 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3-வது நீதிபதியான சத்திய நாராயணனிடம் சென்றது. இந்த வழக்கின் மீதான அனைத்து தரப்பு வ...
பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்

பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனது பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ் ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய...