ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்!

கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்! கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் படங்கள் இயக்க தயாராகி உள்ளார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இந்தியன் 2 வழக்கு இதற்கு தடையாக உள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து விட்டுத்தான் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. அதே நேரம் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்தியன் 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவ...
இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை யாமி கவுதம்!

இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை யாமி கவுதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை யாமி கவுதம்! தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வருபவர் யாமி கவுதம். தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், திடீரென இன்று திருமணம் செய்து கொண்டார். இந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம் செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இதுப்பற்றி யாமி கவுதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்...
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....
வெப் தொடர் பக்கம் போன ஓவியா!

வெப் தொடர் பக்கம் போன ஓவியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெப் தொடர் பக்கம் போன ஓவியா! மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா. அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டதால், அவருக்கு தற்போது பட வாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் நடிகை ஓவியா வெப் தொடர் பக்கம் திரும்பி உள்ளார். மெர்லின் எனும் வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நாளை யூடியூப்பில் வெளியாக உள்ளது. ...
44 வயதில் 2-வது திருமணத்திற்கு தயாராகும் நடிகை பிரேமா!

44 வயதில் 2-வது திருமணத்திற்கு தயாராகும் நடிகை பிரேமா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
44 வயதில் 2-வது திருமணத்திற்கு தயாராகும் நடிகை பிரேமா! தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரேமா. பெங்களூருவை சேர்ந்த இவர், கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கிலும் 28-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த பிரின்ஸ் படம் பெரிய வெற்றி பெற்றது. சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு விருதும் பெற்றுள்ளார். நடிகை பிரேமா, கடந்த 2006-ம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்து பிரிந்தனர். நடிகை பிரேமாவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. இந்த நிலையில், அவர் 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், மாப்பிள்ளை...
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்....
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக எமோஜி வெளியிட்ட டுவிட்டர் – கொண்டாடும் ரசிகர்கள்!

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக எமோஜி வெளியிட்ட டுவிட்டர் – கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக எமோஜி வெளியிட்ட டுவிட்டர் - கொண்டாடும் ரசிகர்கள்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்திற்காக டுவிட்டரில் சிறப்பு எமோஜி வெளியிடப்பட்டு உள்ளது. தனுஷ் படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதன்முறை. ஜகமே தந்திரம் படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள எமோஜி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல், பிகில், சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டது குறி...
ஊரடங்கு விதிமீறல்…. காதலியுடன் காரில் சுற்றிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!

ஊரடங்கு விதிமீறல்…. காதலியுடன் காரில் சுற்றிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
ஊரடங்கு விதிமீறல்.... காதலியுடன் காரில் சுற்றிய பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு! பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்திக்கு போனார். தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அண்மையில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார். இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக இவர்கள் இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப...
சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் – பிரபல இயக்குனர் கோரிக்கை!

சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் – பிரபல இயக்குனர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
சமூக வலைதள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - பிரபல இயக்குனர் கோரிக்கை! தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் இயக்கத்தில் தற்போது லிகர் என்கிற படம் உருவாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சமூக வலைதள பக்கத்திலும் ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது, ஒவ்வொருவருடைய சமூக வலைதள கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென அவர் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார் இது குறித்து பூரி ஜெகன்நாத் தெரிவித்துள்ளதாவது: “நாளுக்கு நாள் சமூக வலைதளத்தில், பிடிக்காதவர்களை கிண்டல் செய்வதும், அவர்கள் மீது அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் பு...