ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? – இயக்குனர்கள் விளக்கம்!

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? – இயக்குனர்கள் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? - இயக்குனர்கள் விளக்கம்! சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இத்தொடரை இயக்கி உள்ளனர். இதில் நடிகை சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாகவும், மனித வெடிகுண்டாகவும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்த நிலையில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சமந்தா போராளி சீருடையில் குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்து இருப்பதாக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ள இந்த தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பிலும் வற்புறுத்தப்பட்டு உள...
கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்!

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரண நிதி 2வது தவணை - முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை ஜூன் 3ம் தேதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங...
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்! 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை * வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். * 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற சட்டசபையில் தீர்மானம்...
பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்!

பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பத்மா சேஷாத்ரி பள்ளியா? பள்ளியறையா?? முட்டு கொடுப்பவர்கள் முன்னுக்கு வரவும்! https://youtu.be/PWUcxb52fl0
‘கே.ஜி.எப் 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

‘கே.ஜி.எப் 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கே.ஜி.எப் 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது. இபடத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே.ஜி.எப் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை 16-ம் தேதி  ‘கே.ஜி.எப் 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள...
போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!

போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்!! தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது. இந்தி திரையுலக போதை...
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் நடிக்கு...
அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல –  ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!

அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல – ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல - ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!! இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. மைதான் படத்துக்காக ரூ.2 கோடி செலவில் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் ஒன்று சமீபத்தில் வீசிய டவ்தே புயலில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “மைதான் படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதா...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை! கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தள...
கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி  பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்! 

கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி  பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்! 

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடந்த 5 ஆண்டுகளாக 11,12-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பத்மாசேஷாத்திரி  பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்! சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பள்ளியான  பத்மாசேஷாத்திரி  பள்ளி  மாணவிகளுக்கு வணிவியல் ஆசிரியர் ராஜகோபாலன்  பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, அரை நிர்வாணமாக காட்சி அளித்து, பாலியல் ரீதியிலான சேட்டை செய்ததாகவும், பள்ளி மாணவிகள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் அந்த  ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும...