ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க - கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்! விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறித்து இயக்குனர் ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது. அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே...
தேசிய விருது பெற்ற சினிமா இயக்குனர் டென்னிஸ் ஜோசப் திடீர் மரணம்!

தேசிய விருது பெற்ற சினிமா இயக்குனர் டென்னிஸ் ஜோசப் திடீர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தேசிய விருது பெற்ற சினிமா இயக்குனர் டென்னிஸ் ஜோசப் திடீர் மரணம்! கேரள திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தவர் டென்னிஸ் ஜோசப். இவர் கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டென்னிஸ் ஜோசப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் ஜோசப், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். டென்னிஸ் ஜோசப், மலையாள சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர். கதை வசனத்தோடு, பல படங்களையும் இயக்கியுள்ளார். அப்பு, மனுஅங்கிள், அக்ராஜன், தொடர்கதா, அதர்வம் உள்ளிட்ட மலையாள மொழி திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. டென்னிஸ் ஜோசப் இயக்...
மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு!

மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது - தயாரிப்பாளர் அறிவிப்பு! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு...
படத்திற்காக போடப்பட்ட செட்டை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்த பிரபாஸ் படக்குழு!

படத்திற்காக போடப்பட்ட செட்டை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்த பிரபாஸ் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
படத்திற்காக போடப்பட்ட செட்டை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்த பிரபாஸ் படக்குழு! யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்துக்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி அந்த செட்டில் உள்ள 50 படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட் உடைகள் ஆகியவற்றை தனியார் மருத்துவமனைக்கு ...
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ...
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் வைபவ்வின் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு! ‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடிகர் வைபவ்வு...
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார். இதைத்யொட்டி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச...
ஏ.எச்.காஷிஃபின் “அல்லா” பாடலுக்கு வரவேற்பு

ஏ.எச்.காஷிஃபின் “அல்லா” பாடலுக்கு வரவேற்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
  ஏ.எச்.காஷிஃபின் அல்லா பாடலுக்கு வரவேற்பு ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பதினெட்டாம்படி உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.எச்.காஷிப். காஷிஃப்பின் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஃபாத்திமாவின் மகனான காஷிஃபுக்கு இசைத்திறமை ஓங்கி இருப்பதில் வியப்பில்லை. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல் தனி இசை பாடல்களிலும் காஷிஃப் தன் திறமையால் கொடி கட்டி பறக்கிறார். இவர் இசை உருவாக்கத்தில் காதலர் தினத்துக்காக உருவாக்கி வெளியிட்ட ஆல்பம் லட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அடுத்து ரெண்டகம், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துவரும் காஷிஃப் இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க தன் புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். புனித ரமலான் பண்டிகையொட்டி அல்லா யா அல்லா...