ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் சந்தீப் கிஷன்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் சந்தீப் கிஷன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் சந்தீப் கிஷன்! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 3417 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நடிகர் சந்தீப் கிஷன் முன்வந்துள்ளார். தமிழில் 'மாநகரம்' 'மாயவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன், தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால், அவர்களைப் பற்றி கீழ்கண்ட இ மெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள். நானும் என்னுடைய குழுவினரும் எங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் அத...
17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் நடிப்பில் தற்போது தலைவி படம் உருவாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை கங்கனா, ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சில சமயங்களில் அதன்மூலம், அவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு, அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது....
அடுத்த படம் ரஜினியுடனா? – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்!

அடுத்த படம் ரஜினியுடனா? – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்த படம் ரஜினியுடனா? - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்! துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். முடிந்தால், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி கேட்டிருந்தார். இதையடுத்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வலம்வந்தன. இந்நிலையில், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிங்கு பெரியசாமி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அடுத்த...
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்!

மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித்தின் ஏகன், வெங்கட்பிரபு இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார். ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு...
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை! பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலார் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடன...
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் மலையாள படம்! நடிகர் விஜய்சேதுபதி, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இந்து வி.எஸ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 19 (1)(a) என்கிற மலையாள படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாம். இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் படமும் ஓட...
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் – 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் – 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கருணரத்னே, ஜெயவிக்ரமா அபாரம் - 2வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை! வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது. கேப்டன் கருணரத்னே 118 ரன்னும், லஹிரு திரிமானே 140 ரன்னும், ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னும், டிக்வெலா 77 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிம் இக்பால் 92 ரன்னும்,...
கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா!

கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா! தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு...