ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் போன்ற படங்கள் உள்ளன. இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் தனுஷின் ராஞ்சனா, அத்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது....
ரஜிஷா விஜயன் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜிஷா விஜயன் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ரஜிஷா விஜயன் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கோ கோ’ படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுவந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜி...
‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்!

‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்! அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது உலகமெங்கிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் அந்த சண்டைக் காட்சியை இந்தியாவிலேயே படமாக்கலாமா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின...
கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்றேன் – பிரபல நடிகை சொல்கிறார்!

கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்றேன் – பிரபல நடிகை சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்றேன் - பிரபல நடிகை சொல்கிறார்! பராகான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சவுமியா சேத். தொடர்ந்து படங்களில் நடித்த அவர் இந்தி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அருண் கபூர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். காதல், திருமண வாழ்க்கை குறித்து சவுமியா சேத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான் கடந்த 2019-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தேன். தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏற்கனவே நான் கர்ப்பமாக இருந்தபோது மன உளைச்சலால் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. தற்கொலை செய்துக் கொள்ள முயன்றேன். ஆனால் எனது பெற்றோர் தடுத்துவிட்டனர். என...
நீதி வென்றுவிட்டது… ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்!

நீதி வென்றுவிட்டது… ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நீதி வென்றுவிட்டது... ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்! அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது. ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசா...
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி? தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற (25-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. என்றாலும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும். இந்த பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்த திருமணங்களையும் நிறுத்தவேண்டியது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்த...
விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை – செல் முருகன் உருக்கம்!

விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை – செல் முருகன் உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், சுற்றுச் சூழலிலும் ஆர்வம் கொண்டவர், இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர். இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டு...
விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!

விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். அதன்பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்...
கொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்…. திரையுலகினர் அதிர்ச்சி!

கொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்…. திரையுலகினர் அதிர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி! கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை  திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 35 வயதே ஆகும் மஞ்சுநாத், கொரோனா த...