ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி!

திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கி வந்தன. பின்னர் அதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் 100 சதவீதம் ஆக்கப்பட்டது. தற்போது இரண்டே மாதத்தில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். நாளை தனுஷின் கர்ணன் படம் ரிலீசாக உள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு படக்குழுவினரிடையே அதிர...
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்ற ரஜினி !

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்ற ரஜினி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்ற ரஜினி ! சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார் இந்நிலையில், அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் ஐதராபாத் சென்றுள்ளார்...
திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் களைக்கப்படுவதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியத்தின் இறுதி முடிவில், படத்தில் ஏற்க முடியாத அளவிற்கு மாறுதல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது தணிக்கை வழங்க மறுத்தலோ படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்படச் சான்றிதழ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது வழக்கம். கடந்த 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தீர்ப்பாயங்கள் திருத்த மசோதா, 2021- ன் கீழ், விமான நிலைய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் , வர்த்தக சட்டத்தின் கீழ் நிறுவ...
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!

ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!! கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் ஏற்கனவே மொத்தம் 22 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு 7 ஆயிரம் தரிசன டோக்கன்கள் குறைக்கப்பட்டு, தற்போது 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் திருப்...
‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

HOME SLIDER, NEWS, politics
‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்! ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து 2 பேரிடமும் விசாரித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த வேளச்சேரி போலீசார், ‘விவிபேட்’ எந்திர...
திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா! சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் ...
முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முதல் ஆளாக வாக்களித்தேன்... விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை - சமுத்திரகனி! தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. திரையுலகினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேசமயம் பல முக்கிய திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை என தகவல் பரவியது. அதில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அவர் ஓட்டு போட்ட விரல் ‘மை’ அடையாளத்துடன் புகைப்படம் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியதாவது: “நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம். ஆனால் ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பி...
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏப்.11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு. தமிழக முதல்வராக 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமான ரூ 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக திமுக தொடர்ந்த வழக்கு  பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தனிநீபதியாக நீதிபதி குன்ஹா நியமிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா வழக்கை  2003ம் ஆண்டு முதல்  விசாரித்து  வந்தார்.  18 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு,  2014-ஆம் ஆண்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.  சொத்துக்குவிப்பு வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும்  4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பதவியில் உள்ள ஒரு முதல்வர் சிறைக்கு சென்றது இதுவே முதல் முறை ...