ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்!

முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார். கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான். என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்ட...
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்!

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்! தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது. நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன்....
முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி! மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் 100 கோடி ரூபாய் மாமூல் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி தெரிவித்தாக முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங் புகார் கூறினார். இது தொடர்பாக அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி அனில் தேஷ்முக் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மந்திரி அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல் துறை அதிகாரி பரம் வீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், பரம் வீர் சிங்கிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. நீங்க...
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்! சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி க...
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்....
லால் எனக்கு கட்டப்பா- கார்த்தி!

லால் எனக்கு கட்டப்பா- கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லால் எனக்கு கட்டப்பா - கார்த்தி! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. பல படங்களில் வில்லனாக மிரட்டிய லால் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லால் பற்றி நடிகர் கார்த்தி கூறும்போது, ‘லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார். என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரம். அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன். உணர்வு, சண்டை, நடனம் எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்கிறார்’ என்றார்....
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி! ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான பக்...
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி! கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை பெ...
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது ! தேர்தல் நடக்கும் சமயங்களில் வாக்காளர்கள் மிக எளிதாக வாக்கு அளிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்குவது வழக்கத்தில் உள்ளது. முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர் சின்னத்துடன் வாக்காளர் சீட்டு அச்சடித்து வீடுவீடாக வினியோகம் செய்வார்கள். அரசியல் கட்சிகள் வாக்காளர் சீட்டுகளை வினியோகிப்பதால், குழப்பம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு சீட்டு வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையமே மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் வாக்களிப்பதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி...
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தினேஷ், அப்படம் முதல் ‘அட்டகத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தினேஷ் நடிப்பில் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அட்டகத்தி தினேஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். “வயிறுடா” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்....