ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர்

குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். https://twitter.com/Music_Santhosh/status/1376227254544461824?s=20...
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா! பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்பின் அவர் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சசிகலா தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் அ.ம.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 6 மணிக்கு சசிகலா திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் ராமேசுவரத்திற்கு சென்றார். இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற் பளிக்கப்ப...
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது!

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டது. கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்த...
தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு!

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு!

HOME SLIDER, NEWS
தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு! ]திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானா அருகில் வேனில் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மொழி, சமூகநீதிக்கு எதிரான ஆட்சி. விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனியில் மத்திய அரசு அடகு வைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளுகின்ற ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து பா.ஜனதாவின் பினாமி ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை தேர்தலின்போது முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள், கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகளின் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். நெல் குவிண்டாலுக...
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு! தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக. இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்க வேண்டாம் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக. அதிமுகவின் முகக் கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் பாஜகதான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. அமித்ஷா மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள், ஆனார் அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்திய...
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்! சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும். சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவர்...
விஜய்-வெற்றிமாறன் காம்போ!

விஜய்-வெற்றிமாறன் காம்போ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்-வெற்றிமாறன் காம்போ! தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். சூரி நடிக்கும் படத்தை முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், அதன்பின் விஜய் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது....
ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது அரசியல் படமாக உருவாக உள்ளதாகவும், ராம்சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது....
ஷாருக்கான் – அட்லீ பட அப்டேட்!

ஷாருக்கான் – அட்லீ பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட்! 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதன்பின் அந்தப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் இயக்குனர் அட்லீ ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதன்மூலம் ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கிய...
நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா? இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டு...