ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்கிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா!

ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்கிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் அதற்குப் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஸ்நீக்பிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடவுள் பெயரால் பொது மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டுவது போன்ற ஒரு காட்சி உள்ளது ஜீசஸ் பெயரால் மோசடி செய்வது அவருக்கு பிடிக்காது என்றும், ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்றும், நரகத்திற்கு உன்னை கொண்டு சென்று எண்ணெயில் போட்டு பொரித்து வ...
“ஈஸ்வரன்” சிம்புவுக்கு இரண்டாவது முறையாக வனத்துறை நோட்டீஸ்

“ஈஸ்வரன்” சிம்புவுக்கு இரண்டாவது முறையாக வனத்துறை நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்புவின் 46-வது திரைப்படமாக ஈஸ்வரன் உருவாகி வருகிறது; திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயதசமி அன்று, வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு தனது தோளில் பாம்புடன் இருப்பதுபோல் காட்சிகள் உள்ளன. முதலில் அதைப் பார்த்த பலரும் அது கிராபிக்ஸாக இருக்கலாம் என நினைத்தனர். இந்த நிலையில், வனப்பகுதி ஒன்றில், மரத்தின் மீதுள்ள பாம்பு ஒன்றை நடிகர் சிம்பு லாவகமாகப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ள நிலையில் அவற்றை பிடிப்பது, தனி நபர்கள் வைத்திருப்பது வனத்துறை சட்டப்படி குற்றச் செயலாகும். அதனால், சிம்பு மீது, வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை ...
சர்வதேச விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் தீபாவளியன்று OTTயில் ரிலீஸ்!

சர்வதேச விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் தீபாவளியன்று OTTயில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வதேச விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது. மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’ . காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும் www.ottmovie.in ஆகிய இணையத்தில் ‘பச்சை விளக்கு’ படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. OTTMOVIE APP யை கூகுல் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே ‘பச்சை விளக்கு’ படத்தை பார்த்து ரசிக்கலாம். அத்துடன், www.ottmovie.in என்ற இணையத்தளம் மூலமாகவும் படத்தை பார்க்கலாம். Stay Home.Stay Entertained. காதல் கலந்த சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் படமா...
புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் – பப்ளிக் ஸ்டார்

புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் – பப்ளிக் ஸ்டார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
புதுப்படங்களின் வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் - பப்ளிக் ஸ்டார் பாராட்டு கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன. இந்த நிலையில், தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் நடிகர் பப்ளிக் ஸ்டார், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமைய...
டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்

டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு டிடிவி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை வீட்டார் சீர் வரிசை தட்டு எடுத்து வந்தனர். டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை டிடிவி.தினகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் ஒரே மேடையில் உட்கார வைத்து உறவினர்கள் அவர்களுக்கு பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதை...
வெற்றிமாறன் வழங்கும் காவல்துறை உங்கள் நண்பன்

வெற்றிமாறன் வழங்கும் காவல்துறை உங்கள் நண்பன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி வெற்றிமாறன் வழங்கும் “காவல்துறை உங்கள் நண்பன்” ! Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியது படத்திற்கு தனி முத்திரையை பெற்று தந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அட்டகாச பரிசாக தேசிய விருது பெற்ற படைப்பாளி மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தனது Grassroot film company மூலம் இப்படத்தை வழங்கவுள்ளார்.   Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது... தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக அனைவராலும் போற்றப்படும் வெற்றிமாறன் போன்ற படைப்பாளி இப்படத்தின் மீது கவனம் கொள்வது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் ஆசிர்வாதம் ஆகும். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்கள் மீது வெற்றிமாறன் எப்போதும் பெரும் காதல் கொண்ட...
தனுஷ் வெளியிடும்  ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஹாலிவுட் பாடல் ‘க்ரெயிங் அவுட்’

தனுஷ் வெளியிடும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஹாலிவுட் பாடல் ‘க்ரெயிங் அவுட்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஹாலிவுட் பாடல் 'க்ரெயிங் அவுட்': தனுஷ் வெளியிடுகிறார் 'சூரரைப் போற்று' படத்தின் பின்னணி இசைக்காக பல்வேறு திரையுலகினருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழ்த்துகளோடு அடுத்த அதிரடி ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஹாலிவுட்டில் 'லோல்ட் நைட்ஸ்' என்ற ஆல்பத்தின் மூலம் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். அந்த ஆல்பத்தின் 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. அனைத்து பாடல்களுக்கான தளத்திலும் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். அந்தப் பாடல் பெரும் வைரலாகி வரவேற்பைப் பெற்றது. அதற்கு கிடைத்த வரவேற்பால் உலகளவில் பிரபலமான ஜஸ்டின் பீபர், ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் கணக்கைப் பின் தொடர்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது, 'கோல்ட் நைட்ஸ்' ஆல்பத்திலிருந்து அடுத்த பாடலுக்கு தயாராக...
மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஜெகமே தந்திரம் தனுஷ்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது கடந்த நவம்பர் 9 ஆம் தேதி புஜ்ஜி பாடல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு புஜ்ஜி பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது. என்னை மட்டும் லவ் யூ சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி, என்னை மட்டும் பாலோவ் பண்...
2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2021 தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுகவில் குழுக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு 2021 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டு உள்ளனர். சட்டமன்ற பேரவை பொது தேர்தல் – 2021 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்துள்ளது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள். அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக்குழு, கழகத்தின் சார்பில் ஊடகவியலாளர், செய்தியாளர்களை சந்திக்கும் குழு, ஊடக ஒருங்கிணைப்பாளர் உள்பட பல குழுக்களும், அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்....
கதை திருட்டு பிரச்சனையால் பொங்கலுக்கு தள்ளிப்போன பூமி ரிலீஸ்

கதை திருட்டு பிரச்சனையால் பொங்கலுக்கு தள்ளிப்போன பூமி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கதை திருட்டு பிரச்சனையால் தள்ளிப்போன பூமி ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆமால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இப்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது...