வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

அரசியல் நையாண்டி செய்யும் படங்களில் LKG புதுரகம்..!

அரசியல் நையாண்டி செய்யும் படங்களில் LKG புதுரகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான 'LKG' உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில்  படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு ...
LKG அரசியல் பேசும் பொழுது போக்கு படம்..!

LKG அரசியல் பேசும் பொழுது போக்கு படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, "எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார், ஆனால் துரதிருஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்த படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்த...
வெளி நாட்டில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா…

வெளி நாட்டில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ஆர்யா பூஜா, நயன்தாரா, எமி ஜாக்சன், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை தொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இது குறித்து இருவரும் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் சாயிஷா ஆர்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தன்று அறிவித்தார். தற்போது நடிகர் ஆர்யா - சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
இளநீர் குடித்தபடி கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி..!

இளநீர் குடித்தபடி கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ்  சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. 'கற்க கசடற' திரைப்படத்தின் மூலம் அறிமுமாகி அதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றார். அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலை நாட்டினார். பின்பு சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதையும் வாடிக்கையாக வெய்து வருகிறார். https://twitter.com/iamlakshmirai/status/1097361288588607490?s=19 இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி பிங்க் கலர் பிகினி உடை அணிந்து கொண்டு, இளநீருடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை...
BMW பைக் ஜெயிக்கனுமா… தேவ் பட போட்டியில் பங்கு பெறுங்க..!

BMW பைக் ஜெயிக்கனுமா… தேவ் பட போட்டியில் பங்கு பெறுங்க..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன. போட்டி பற்றிய விவரங்கள்: a) நீங்களோ அல்லது b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள். அதோடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன? கேள்வி 2: தேவ் திரைப்படத்தில், மேக்னா பணத்தின்‌ மீது அதிக பற்று உடையவரா? கேள்வி 3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன? ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளு...
தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிடுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் – ரஜினி அறிக்கை பாஜக அதிர்ச்சி

தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க திட்டமிடுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் – ரஜினி அறிக்கை பாஜக அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் 32 மாவட்டச் செயலாளர்களை சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனைவரது கருத்துக்களையும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் கேட்ட பிறகு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது. ரஜினி மன்றத்தின் கொடி, படம், பெயர் போன்றவற்றை எந்த கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்த கூடாது. தமிழகத...
சர்வதேச விருது போட்டிகளில் கலந்து கொள்ளும் பட ரகசியம்..! டுலெட் இயக்குனர் செழியன்

சர்வதேச விருது போட்டிகளில் கலந்து கொள்ளும் பட ரகசியம்..! டுலெட் இயக்குனர் செழியன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட்  ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட்  ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்தெல்லாம் தனது...
வரவேற்பு பெற்ற “காத்து வாக்குல ஒரு காதல்” டீசர்!

வரவேற்பு பெற்ற “காத்து வாக்குல ஒரு காதல்” டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காதலர் தினத்தில் வந்த 'காத்து வாக்குல ஒரு காதல் ' படத்தின் டீஸரை  பிபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் 'காத்து வாக்குல ஒரு காதல்'. சீரடி சாய்பாபா வழங்கும்  எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில்  இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி  .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும...
48 மணிநேரம் தொடர்ந்து “அயோக்யா” ஷூட்டிங்கில் நடித்த விஷால்..!

48 மணிநேரம் தொடர்ந்து “அயோக்யா” ஷூட்டிங்கில் நடித்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் -ல் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .  நடிகர் R.பார்த்திபன்,ராதாரவி,கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு  சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டத...
இராவுத்தர் குடும்ப தயாரிப்பில் ஆரியின் படம்!

இராவுத்தர் குடும்ப தயாரிப்பில் ஆரியின் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" எனும் படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்...