நடிகர் ஆர்யா பூஜா, நயன்தாரா, எமி ஜாக்சன், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை தொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இது குறித்து இருவரும் மௌனம் காத்து வந்தனர்.
இந்நிலையில் சாயிஷா ஆர்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தன்று அறிவித்தார். தற்போது நடிகர் ஆர்யா – சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
422 Views