
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை, நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.
அந்த அளவுக்கு ‘ரபேல்’ விமான பேரத்தில் இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவை தப்ப விட்டுள்ளது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில், மோடி சாதாரண மக்களை வங்கி முன்பு வரிசையில் நிற்க வைத்தார். 15 தொழில் அதிபர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அவரால் விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாதா? இவ்வாறு அவர் பேசினார்
437 Views
