வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’

 

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.
இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – ஸ்ரீதர், படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா, தயாரிப்பு – பா.ரஞ்சித், எழுத்து, இயக்கம் – மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர்.
படம் பற்றி கூறிய இயக்குனர்…
“இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்
337 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன