செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

 

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TMJA) தீபாவளி மலர் வெளியிடும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது.

செயற்குழு உறுப்பினர் முபாஷர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா பேசினார்.
சங்க செயலாளர் கோடங்கி வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக் கொண்டார்.
விழா மிக சிறப்பாக நடந்தது.

மிகவும் சிரமத்தில் இருக்கும் உயரம் குறைந்த நடிகர்களுக்கு சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

முன்னதாக செயற்குழு உறுப்பினர் சஞ்சய் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி பேசினார். முடிவில் சங்க துணை தலைவர் ஒற்றன் நன்றி கூறினார்.

 

804 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன