காற்றின் மொழி விமர்சனம்

 

காற்றின் மொழி விமர்சனம்

கிரிக்கெட் மேட்ச்ல செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் ஓவர்ல முதல் பால் தொடங்கி 6 பால்லயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்கும்… அதேநேரம் அதுல சில பால் நோ பாலா மாறி அதுக்கும் சேர்த்து எக்ஸ்ட்ரா பால் கிடைச்சி அதுலயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்குமோ அப்படியிருக்குது ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸ்…

அதுலயும் குறிப்பா இந்த படத்துல ஜோ செம…
ஒரு பையனுக்கு அம்மா… சராசரி மிடில் கிளாஸ் புருஷனுக்கு அன்பான பொண்டாட்டி… அப்படின்னு அடுப்பாங்கரையிலயே தன் உலகத்தை முடிச்சிக்கிற சாதாரண குடும்பஸ்திரி… இஸ்திரி போட்ட காட்டன் புடவைய கட்டிகிட்டு மிடுக்கா வேலைக்கு போன என்ன சந்தோஷம் இருக்குமோ அதை அப்படியே ஸ்கிரீன்ல காட்டுகிறார்…


சமையல்கட்டுல இருக்குறவங்ககிட்டயும் திறமை இருக்கும்… அதுக்கு படிப்பு முக்கியம் இல்ல… அனுபவம்தான் முக்கியம்னு சொல்ற கதைதான் காற்றின்மொழி படம் சொல்லும் பாடம்.
படம் தொடங்கின கொஞ்ச நேரத்துலயே மயில்சாமி வந்து படம் பாக்குற அத்தனை பேர் வயிறையும் பதம் பாக்குறமாதிரி காமெடியில பிச்சி ஒதற… இனிமே டெலிபோன்ல ‘ஹலோ…ஓஓஓஓ’ன்னும் முந்திரியை பாக்கும்போதெல்லாம் மயில்சாமிதான் நினைவுக்கு வருவார்…

ஜோவுக்கு குடும்பம்னு இருந்தா அதுவும் வேலைக்கு போற பொண்டாட்டிகிட்ட ஏதாவது குத்தம் சொல்ல காத்துகிட்டிருக்குற புருஷன் மாதிரியே படத்துல புருஷனா வர்ற விதார்த்தும் வந்து வந்து போறார்…

ஒரு பக்கம் அப்பா அக்காக்களோட ஓவர் அட்வைஸ்… இன்னொரு பக்கம் புருஷன் கடுப்பு… அடுத்ததா பையனோட தவறான நடவடிக்கைகள் இதை எல்லாம் ஒருபக்கம் சமாளிச்சிகிட்டே ரேடியோ ஜாக்கியா மாறினதும் ஊர் முழுக்க சொல்ற சோக கதைக்கு தீர்வு சொல்றதை சாதாரண குடும்ப பெண்ணால் முடியும்னு ஜோ கேரக்டரை வடிவமைச்ச இயக்குனர் ராதாமோகனுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
வழக்கமா எல்லா குடும்பத்துலயும் இது மாதிரி சிக்கல் இருக்கத்தான் செய்யும்… அதை மிக தெளிவா ரொம்ப யதார்த்தமா ஒரு சினிமா மாதிரி இல்லாம ரொம்ப ஜாலியா பாக்குறமாதிரி எடுத்திருக்கார் இயக்குனர் ராதாமோகன்.

என்னதான் இந்தியில இந்த படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் ஜோ வேஷத்துல அங்க வித்யாபாலன் நடிச்சிருந்தாலும் தமிழ்ல ஜோதிகாவுக்கு இணை ஜோதிகாதான்..!
எந்தளவுக்கு ஜாலியும், மகிழ்ச்சியும் இருக்கோ அதே அளவுக்கு சென்டிமெண்ட்டும் இருக்கு…
ராதாமோகன் படம்னு சொன்னாலே கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டு ஒரு கூட்டம் இருக்கும்… எம்எஸ்.பாஸ்கர், குமாரவேல், மனோபாலா, மதுமிதா, மோகன்ராம் இப்படி… இதுல எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டர் வழக்கமான சென்டிமெண்ட் டச்…


ரேடியோ நிறுவன அதிகாரியா வர்ற லஷ்மி மஞ்சு மார்டன் கேர்ள்..!

சிம்பு கெஸ்ட் ரோல்… பேச்சு பெருசா இல்ல… மிடுக்கு இருக்கு… சிம்பு சும்மா தலைய ஆட்டுறதையே அவர் ரசிகர்கள் ரசிக்கிற மாதிரி எடுத்திருக்கார் இயக்குனர்..!

படத்துல நடிக்க சம்மதம் சொன்னபோதே ஹீரோவோட நெருக்கமான சீன் எதுவும் இருக்கக்கூடாதுன்னு ஜோ கண்டீஷன் போட்டிருப்பாங்க போல பெட்ரூம்ல ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு பாடும்போது கூட ஜோவுக்கும் விதார்த்துக்கும் அவ்ளோ தூரம்… அந்த மாதிரி இடங்கள்தான் நாடகத்தனம்…

ஒரு வீட்டுக்குள்ளயே பாதி படம்… ஒரு ஸ்டுடியோ செட்டப்புல மீதி படம் மிச்சம் மீதி வந்து போற ஒன்னுரெண்டு காட்சிகளை ‘மானே தேனே பொன்மானேன்னு’ பாட்டுல பில்லப் பண்றமாதிரி அங்கங்க லாங் ஷாட்டுல ஷூட் பண்ணி மகேஷ் முத்துசாமி படத்தை கேமராவுக்குள்ள அடைச்சி குடுத்துட்டாரு…


வயசு காலத்துல இருக்குற பெண் துணையை விட வயசான காலத்துல இருக்குற பெண் துணைதான் வாழ்க்கையில ரொம்ப முக்கியம்னு துணை இல்லாம வாழும் வயசானவங்களுக்கும் ஜோதிகா மூலமா ஒரு உற்சாகத்தை குடுத்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்..!

பட ரிலீசுக்கு பின்னாடி வயசானவங்க பலர் மண்டைக்கு மேலயும் அப்பப்ப பல்ப் எரியும்… மணி அடிக்கும்…

மொத்தத்துல டிராமா பாக்குற உணர்வு இருந்தாலும் காற்றின் மொழி குடும்பத்தோட ரொம்ப ஜாலியா பார்க்கக் கூடிய படம்…

கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *