பாடகர் வேல்முருகனும்… கின்னஸ் சாதனைக்கான ஒயிலாட்டமும்..!

 

ஒயிலாட்டம்
கின்னஸ் சாதனை
முயற்சி!
பிண்ணணிபாடகர்
வேல்முருகன் பேட்டி!

பின்னணிபாடகர் வேல்முருகன் கூறியதாவது ; –
” தமிழின் பெருமையும் தமிழர்களின் உணர்வுகளையும் பறைசாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25.11.18 ஞாயிறு அன்று சென்னை திருநின்றவூர் அருகே உள்ள ஜெயா கால்லூரியில் மதியம் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நடனத்தை 5000 பேருக்கும் மேல் நடனமாடி கின்னஸ் உலாகசாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.

இந்த சாதனை நிகழ்வில் பங்கு பெற அதிகமானபேர் பெயர் கொடுத்து வருகின்றனர்.

இந்த முயற்சிக்கு
நடிகர் சங்க தலைவர் நாசர், இசைமைப்பாளர்கள் தேவா, ஜி.வி.பிரகாஷ்,கவிஞர் பிறைசூடன், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், நடிகர்கள் தம்பிராமையா, சூரி, ரோபோசங்கர், போஸ்வெங்கட், வையாபுரி, நடிகை ஆர்த்தி, திண்டுக்கல் லியோனி, சுப.வீரபாண்டியன், ஈரோடுமகேஷ், நடனஇயக்குனர் தினேஷ், தீபக், மைன்கோபி,வாழ்த்து தெரிவித்துள்ளனர்.” இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்காக சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிண்ணணிபாடகர் வேல்முருகன், கின்னஸ் மற்றும் ஆசிய புக் ஆப்ரெக்கார்ட் மேனேஜ்மெண்ட் குழுவை சார்ந்த விவேக், சுரங்களின் சங்கமம் இசைகுழுவை சேர்ந்த ராஜேஷ் – பரதத்தில் கின்னஸ் சாதனை புரிந்த சௌமியா, ரெயின்ட்ராப்ஸ்அரவிந்த் , பி.ஆர்.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

25.11.18 அன்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம், பத்மஸ்ரீ விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், நடிகர் தம்பிராமையா, கவிஞர் பிறைசூடன், நடனமாஸ்டர் தினேஷ் மற்றும் திரைஉலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *