வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

இளம் நடிகரிடம் ஒரு கோடி ஏமாற்றிய புகார் மிஷ்கினுக்கு கிரைம்,த்ரில்லர் படங்களை இயக்க கோர்ட் திடீர் தடை..!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.


மைத்ரேயாவின் மனுவை ஏற்று கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்ரேயா அளித்த பேட்டியில் ’மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது சத்தியம் செய்தார். இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்கிறார்.

எங்கள் படத்துக்காக அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசி, ஒரு கோடி ரூபாயை அட்வான்சாக கொடுத்தோம். பலமுறை பேச முயற்சித்தோம். அவர் முன்வரவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சங்கம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
எனவே கோர்ட்டுக்கு சென்றேன். விஷால் எனக்கு உதவுவதாக கூறியுள்ளார். நான் அடுத்து ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்’.

572 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன