ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போட்டி வலுத்து வருகிறது. இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் ‘தி அயர்ன் லேடி’ என்ற படம் உருவாகவுள்ளது.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க வெப் சீரிஸ் ஒன்றுக்கு உருவாகவுள்ளது. மேலும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி படமாக்க திட்டமிட்டு வருகிறார். இவர்களின் பட்டியலில் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இணைந்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானது முதல் அரசியலில் களமிறங்கி தமிழக முதல்வர் ஆன வரையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இதில் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா கேரக்டரில் ’அராத்து ஆனந்தி’ சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் இயக்கிய தியா படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். அதோடு மலர் டீச்சர் ஆக இருந்த சாய் பல்லவி சமீபத்தில் அராத்து ஆனந்தியாக மாறியிருந்தது தமிழ் ரசிகர்கள் மனசில் சாய் பல்லவிக்கு தனியிடத்தை உருவாக்கி உள்ளது.
எனவே விஜய் விருப்பத்தை ஏற்று சசிகலா ரோலில் சாய் பல்லவி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *