புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

தீவிரவாதிகள் தாக்குதல் நேரத்தில் போட்டோ ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததற்கு தேசமே கண்ணீர் விட்டு கதறிய வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர், நாடே இந்தத் துயர சம்பவத்தை நினைத்து வருந்தியது. இந்நிலையில் வீரர்கள் உயிரிழந்த வேளையில், பிரதமர் மோடி போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சிஆர்பிஎப் வீரர்கள் இறந்த செய்தி அறிந்தும், கார்பெட் தேசிய பூங்காவில் மாலை 6.30 மணி வரை போட்டோஷூட்டில் இருந்திருக்கிறார் மோடி. தேசத்துக்காக உயிரிழந்தவர்களை விட பதவி மோகம் மோடிக்கு அதிகமாய் இருக்கிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

1,169 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன