வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ராமதாஸ் கூட்டணி முடிவை எதிர்த்து பா.ம.க.வில் இருந்து விலகிய பெண் நிர்வாகிக்கு கமல் அழைப்பு..!

திமுக,அதிமுக காட்சிகளைமிகவும் கடுமையக விமர்சித்து வந்த டாகடர் ராமதாசின் பாட்டாளிமக்கள் கட்சி வரும் (2019) நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டனி வைத்துள்ளது. இக் கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.பாமக அதிமுகவுடன் தேர்தலுக்காக கூட்டணி வைத்தது பொது மக்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்களிடையே கடும்விமர்சனங்களுக்கும் உள்ளானது. இக்கட்சியில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடையேயும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக இருந்த ராஜேஷ்வரி, பாமகவில் இருந்து விலகியுள்ளார் .இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பா.ம.க மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறேன். பா.ம.க அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். எனது விலகல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். பாமக வையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், ராஜேஷ்வரி கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.இதுகுறித்து அவர்கூறியுள்ளதாவது , ‘என்னுடைய தைரியமானஇந்த முடிவை பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அண்ணன் சீமான் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.சகோதரர் தினகரன் தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல்தான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.அதற்காகத்தான் அவரை சந்திக்க உள்ளேன். அதை தவிர கட்சியில் சேருவது பற்றி எல்லாம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன