‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

50 Views

‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’
கோடங்கி விமர்சனம்

யதார்த்த படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் படம்னு போய் ஏமாந்த ஏராளமான நல்ல சினிமா விரும்பிகள் படம் முடிஞ்சி கண்ணு கலங்கி வீங்கி வெறுத்து தெறிக்க வைச்சிருக்கிற படம்தான் கண்ணே கலைமானே…
இயற்கை விவசாயம் பத்தி பேசுறேன்னு இருக்குற விவசாயத்தையும் விவசாயிகளுக்கு மறக்கடிக்க இந்த படம் பாத்தா போதும்…
கதை ஒண்ணும் புதுசு இல்லை… ரசாயன உரங்களை எதிர்த்து இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் கிராமத்து படித்த இளைஞன் உதயநிதி… அந்த கிராமத்தை சேர்ந்த கிராம வங்கிக்கு அதிகாரியாக வருகிறார் தமன்னா.
ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் தமன்னா உதயநிதி விவகாரம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு ஊரில் பெரிய புள்ளியாக இருக்கும் உதயநிதி குடும்பம் பெருசாக எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாலும் கல்யாணத்தை தள்ளிப்போடுகிறார்கள். அதை எப்படியோ முறியடித்து தமன்னாவை கை பிடிக்கிறார். தனிக்குடித்தனம் போகிறார்… மனைவி தமன்னா வேலைக்கு போக உதயநிதி வீட்டு வேலைகள் செய்கிறார். கண்ணுக்கு கண்ணாக வளர்த்த பேரன் இப்படி வேலை செய்வது தெரிந்ததும் உதயநிதி பாட்டியான வடிவுக்கரசி டென்ஷன் ஆகிறார். அதேநேரம், உதயநிதி வட்டிக்கு பணம் வாங்குகிறார். அதை திருப்பி கொடுக்காமல் அடிவாங்குகிறார். கண்ணுக்கு கண்ணாக வளர்த்த பேரன் அடிவாங்கியதை பார்த்து பொங்கும் வடிவுக்கரசியின் கோபம் தமன்னா மீது திரும்புகிறது… கோபத்தோடு தமன்னாவை தேடி வீட்டுக்கு போகிறார்…
அங்கே தமன்னாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார்… அப்படி என்ன அதிர்ச்சி… உதயநிதி ஏன் கடன் வாங்கினார்… என்பதை எல்லாம் சொல்லும் இயக்குனர் சீனு ராமசாமி ‘கண்ணே கலைமானே’ மூலம் கடைசியில் என்னதான் சொல்ல வருகிறார் என்பதுதான் யாருக்கும் வௌங்காமல் போகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி ஏன் இப்படியாகிவிட்டார் என்ற பரிதாபமே அவர் மீது ஏற்படுகிறது…. கதையின் ஒரு காட்சியும் அவர் பாணியில் இல்லை அதே நேரம்… உதயநிதியின் பிரசார அரசியல் படம்போல இருக்கிறது.

வங்கி கடனை பற்றி பேசுகிறார்… விவசாயிகளுக்கு இயற்கை உரம் பற்றி பேசுகிறார்… கிராம சபை கூட்டம் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு மாட்டு லோன் வாங்கி தருகிறார்… மண் புழு உரம் தயாரிக்கிறார்… தேங்காய் வியாபாரம் செய்கிறார்… சம்மந்தமே இல்லாமல் வில்லனிடம் அடிவாங்கி அழுகிறார்… புடவை பாவாடையை துவைத்து காயப்போடுகிறார்… அடிக்கடி கண்ணீர் விடுகிறார்… பார்க்கிற நாமும் கண்களை துடைத்துக் கொள்ளவேண்டியதாகி இருக்கிறது.
செக்கு மாடு மாதிரி ஒரே இடத்தில் சுற்றி வருகிற அரத பழசான லைனை பிடித்து எப்படி படமாக்கியிருக்கிறார் மக்கள் செல்வனை உருவாக்கிய இயக்குனர் சீனுராமசாமி என்பதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

நமக்குதான் வரலைன்னு தெரியும்… அடம் புடிச்சி அழுதா வருமா… பட ரிலீசுக்கு முன்னாடி பேசும்போதே கிளிசரின் போடாமலேயே படத்துல நடிச்ச தமன்னா கண்ணீர் விட்டு இயல்பா அழுது நடிச்சதா சொல்லி பெருமை பட்டாங்க… படம் பாத்த பெறகுதான் தெரியுது..!?

வடிவுக்கரசிக்கு நடிப்பு சிங்கம்… தீனி போடச் சொன்னா சீனி போடாத காபிய குடுத்து குடிக்க சொல்லியிருக்கீங்க… அதையும் அந்தம்மா முடிஞ்ச மட்டும் நல்லா செய்திருக்காங்க…

பூ ராம்… இயல்பாவே கேரக்டரா மாறுகிற இவரை சும்மா அங்கயும் இங்கயும் அலையவிட்டு வேஸ்ட் பண்ணியிருக்கீங்க… இயக்குனர்

நாகேந்திரன்… வட்டிக்கு பணம் கொடுக்கும் வில்லன்…. இந்த ரோல் எதுக்கு வைச்சாங்க… எதுக்கு அடிச்சிக்கிறாங்கன்னு எதுவுமே புரியாம போற கேரக்டர்…

வசுந்தரா… உதயநிதி தோழி கேரக்டர்… சும்மா வந்து போகுது… இன்னும் வேலை குடுத்திருக்கலாம்…

அம்பானி சங்கர்… நல்ல நடிகர்… பெருசா பயன்படல…

யுவன்ஷங்கர் ராஜா இசை பெருசா பயன்படல… இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

மொத்தத்துல கண்ணே கலைமானே படத்துல கலையும் காணோம்…. மானையும் காணோம்… கண்ணு மட்டும் இருக்கு… அதுல பூரா தண்ணீதான் இருக்கு… அது ஆனந்த கண்ணீரா… ஆதங்க கண்ணீரான்னு படம் பாக்குறவங்க மனநிலையை பொறுத்தது..!

கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *