நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

69 Views

நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம்

கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல… ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்…
ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்…
பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்… யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு… யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்…
எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு… ஆனா ஒரே ஒரு குறை… ஓவர் வாய்ஸ்… நடிப்பு பெருசா வரல… இந்த குறைய தவிர எல்கேஜி படம் காலேஜ் லெவல்தான்.
கதைன்னு பெருசா ஒண்ணும் இல்ல… நடப்பு அரசியல்… மறைச்ச அரசியல்… பிராடு ரோடு காண்ட்டிராக்ட்… இடைத்தேர்தல் வெற்றின்னு பல விவகாரங்களை கதையாக்கியிருக்கார் இயக்குனர்.
பல ஆண்டுகளா தேர்ந்த அரசியல்வாதியா இலக்கியவாதியா மேடைகளில் பேசி வந்த நாஞ்சில் சம்பத் நடிகரா அறிமுகம் ஆகி அரசியல் பண்ணியிருக்கார்… தமிழ் சினிமாவுக்கு நல்ல தமிழ் பேசும் அப்பா நடிகரை அடையாளப்படுத்தியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
இயல்பான முகம்… தெளிவான நடிப்பு… இந்த இலக்கியவாதி அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்துக்குள் இப்படி ஒரு நடிகனான்னு யோசிக்க வைக்கிறார்.
பிரியா ஆனந்த் கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்துகிறார்…
நிஜ அரசியல்வாதி ரித்திஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்… அறிமுகம் ஆகும்போது திருப்பாச்சி அருவாள் மாதிரி ஷார்ப்பாக வருகிறார்… படம் முடியும்போது அட்டைக் கத்தியாக்கி ரித்திஷ் இப்போது செய்கிற நிஜ அரசியலையும் வைச்சி செய்த மாதிரி இருக்கிறது காட்சிகள்…
வேல்ஸ் ஐசரி கணேஷ் தயாரித்த எல்கேஜி நிஜமாவே அரசியல் நையாண்டி படம்னு மட்டும் சொல்லிட்டு போகாம மக்கள் என்ன பண்ணணும்னு சொல்லுது… யாருக்கு புடிக்குதோ இல்லியோ தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறிகிட்டிருக்கிற அரசியல்வாதிகளுக்கு ரொம்பவே புடிச்ச படமாயிருக்கும் எல்கேஜி..!

கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *