புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மோடி கூட்டத்தில் விஜயகாந்த் கட்சி கலந்து கொள்ளுமா? பொன்னார் பதில்

 

அதிமுக – பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.


இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வருவது தமிழக மக்களுக்குச் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதைப் போல உள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரதமர் எப்போது வந்தாலும் மத்திய அரசின் பல கோடி ரூபாய் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். தி.மு.க.வினர் பதவி சுகத்தை மட்டும் அனுபவித்தவர்கள். நாட்டை கொள்ளை அடித்தவர்கள். தி.மு.க.வோடு சேர்ந்துள்ள நால்வர் அணி தே.மு.தி.க.வோடு கூட்டணியிலிருந்தபோது என்ன நிகழ்ந்தது என்று 2016 தேர்தலிலே பார்த்தோம்’ என்றார்.

இதைத் தொடர்ந்து தே.மு.தி.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, தே.மு.தி.க.தான் முடிவெடுக்க வேண்டும். தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதை அ.தி.மு.க தான் கூற வேண்டும்’ என்று கூறினார்

667 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன