பாஜக எம்பியும் எம்எல்ஏவும் செருப்பால் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம், சான்ட் கபீர் நகரில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி சரத் திரிபாதியும், பாஜக எம்எல்ஏ ராகேஷ் பகேலும் பங்கேற்றிருந்தார். அந்தத் தொகுதியில் நடந்த சாலை அடிக்கல் நாட்டுவிழா கல்வெட்டில் தன் பெயர் ஏன் இடம்பெறவில்லை எனக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார் ராகேஷ். இந்த விவாதம் முற்றியதில் ராகேஷ் செருப்பை கழற்ற முயன்றார், அதை பார்த்து ஆத்திரமடைந்த சரத் திரிபதி தன் காலணியை கழட்டி ராகேஷை தாக்க துவங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இருவரும் தாக்குதலில் ஈடுபடவே, அங்குள்ள காவலர்கள் இடையில் புகுந்து சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். இப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல பாஜக தலைமை அமைதியாக இருக்கிறது.
#WATCH Sant Kabir Nagar: BJP MP Sharad Tripathi and BJP MLA Rakesh Singh exchange blows after an argument broke out over placement of names on a foundation stone of a project pic.twitter.com/gP5RM8DgId
— ANI UP (@ANINewsUP) March 6, 2019
அதைப்போலவே ஊடகங்களும் இந்த செருப்படி விவகாரத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. எல்லாம் மோடி சர்க்காரின் “நல்ல” கவனிப்பு தானாம்.