திங்கட்கிழமை, மே 20
Shadow

7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ல் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம்!

 

உச்ச நீதி மன்றத்தின் விடுதலை தீர்ப்பைத் தாண்டியும் எழுவரின் விடுதலையை ஆளுநர்தான் தீர்மானிக்க வேண்டும் என்பது எவ்வளவு முரணான காரியம்??

தண்டனை தருவதற்கும் நீதியை நிலைநாட்டவும் உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பைத் தாண்டி எம் அண்ணன்மார்களின் அக்காவின் விடுதலை அரசியலமைப்பு இக்கட்டுக்குள் சிக்கித் தவிப்பது கொடும் வேதனை…

அரசியல் கட்சிகளாகப் பிரிந்து நின்றாலும்.. இந்த விடுதலையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்பதில் மட்டும் இருபெரும் மத்திய கட்சிகளும் கைகோர்த்தே நிற்கின்றன.

மாநில கட்சிகளுக்கும் வாய்திறக்கா அதிகாரம்..

என்ன செய்யவென்று புரியாமல் திணறும் எழுவரின் உறவும் தாய் தந்தையரும்..

அதுவும் அற்புதம்மாள்… ஒரு அற்புத அன்னை.

விழாத கட்சியினரின் கைகளில்லை. எல்லோரிடமும் கெஞ்சிவிட்டார். அரசியல் சார்பற்று அனைவரிடமும் ஒரு அன்னையாக கேட்டுவிட்டார்.

எல்லா அன்னைகளும் மகவை பத்து மாதத்தில் இறக்கி வைத்துவிடுவர். ஆனால் இந்த அன்னையோ 28 வருடங்கள் பத்து மாதமாக மகனை சுமந்து திரிகிறார்.

நம் வலி தெரியாத ஆட்சியாளர்களுக்கு நம் வலியையும் வலிமையையும் உணர்த்த வேண்டிய தருணம் இது…

மார்ச் 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணிவரை மனிதச் சங்கிலி போராட்டம் 7 பெரு நகரங்களில் நடைபெறுகிறது.

நாம் மனிதச் சங்கிலியாக வேண்டாம். இத்தனை வருட துன்பத்தை தாங்கும் உடன் பிறப்புகளை மீட்டெடுக்கும் மனித நேயச் சங்கிலியாவோம். வாருங்கள். இணைவோம். நேயத்தை நிகழ்த்துவோம்..

– இயக்குனர் சுரேஷ் காமாட்சி
திரைப்பட தயாரிப்பாளர்.

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன