தமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.சூப்பர் டீலக்ஸ்,மாமனிதன்,சிந்துபாத் என கைவசம் நிறைய பணடங்களை ரிலீசுக்கு தயாராக வைத்துள்ளார். அடுத்ததாக வாலு,ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தருடன் விஜய்சேதுபதி இணைகிறார்.
இந்த படத்தை விஜயா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ,ராஷி கண்ணா நடிக்கின்றனர். சூரி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.
469 Views
